வெங்கட்பிரபுவிற்கு தெலுங்கில் வாழ்த்து கூறிய இளையராஜா.. எதற்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு என்பதும் அவரது இயக்கத்தில் உருவான சிம்புவின் 'மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் 'மாநாடு’ திரைப்படத்திற்கு பின்னர் தற்போது அவர் ’கஸ்டடி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் முறையாக தெலுங்கு திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு இந்த படத்தில் இசையமைக்கும் இளையராஜா தனது வாழ்த்துக்களை தெலுங்கில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
என்னுடைய உதவியோ என்னுடைய தம்பியின் உதவியோ இல்லாமல் நீயாகவே முயற்சி செய்து திரையுலகில் ஒரு இடத்தை பெற்றுள்ளாய். உன்னுடைய புதிய திரைப்படத்தின் பூஜையில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் நான் வருத்தமடைகிறேன். இருந்தாலும் என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு. நீ இயக்கும் படத்தில் நான் இசையமைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரவுக்கு தெலுங்கில் இளையராஜா வாழ்த்து கூறிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
All the best @vp_offl for your debut film in Telugu industry. pic.twitter.com/QNuFaCSrWp
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com