இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா இணைந்த பாடலின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து கம்போஸ் செய்த பாடலின் ரிலீஸ் தேதியை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் இசை ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய திரைப்படம் ’மாமனிதன்’. இந்த படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்ட போதிலும் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இருப்பினும் மிக விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா. யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து கம்போஸ் செய்த பாடல் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அப்பாவும் நானும் இணைந்த மியூசிக்கல் விருந்தை ரசிக்க தயாராக இருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பதும், இந்த பாடலை ரசிக்க இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது