11ஆம் வகுப்பு பாடத்தில் சிம்பொனி தமிழரும், ஆஸ்கார் தமிழரும்
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் கல்வியாண்டு முதல் தமிழக பள்ளிகளில் உள்ள 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது என்பது தெரிந்ததே. பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் முயற்சியில் மாற்றப்பட்டுள்ள இந்த புதிய பாடத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் 11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து ஒரு பாடம் உள்ளது. 'இசைத் தமிழர் இருவர்' என்ற தலைப்பில் 'சிம்பொனி தமிழர்' என்ற பெயரில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா குறித்த பாடமும் 'ஆஸ்கர் தமிழர்' என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளன. இந்த பாடத்திற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையிசை துறையில் உலக அளவில் சாதனை படைத்துள்ள இசைஞானி, ஆஸ்கார் நாயகன் ஆகியோர்கள் குறித்து பாடப்புத்தகத்தில் பாடம் இடம்பெற்றுள்ளது கோலிவுட் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாகவே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout