இளையராஜா - கமல்ஹாசன் சந்திப்பு: புகைப்படங்கள், வீடியோ வைரல்!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் திடீரென இன்று சந்தித்து கொண்டதை அடுத்து இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகனின் பல திரைப்படங்களுக்கு இசை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதும் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு கமல்ஹாசன் வருகை தந்தார். கமல்ஹாசனை இசைஞானி இளையராஜா இன்முகத்துடன் வரவேற்றார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாகவும் இருவரும் சில நிமிடங்கள் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளையராஜா மற்றும் கமல்ஹாசன் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.