உறவுகள் தொடர்கதை: இசைஞானியுடன் மீண்டும் கங்கை அமரன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளதாக கங்கை அமரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இசைஞானி இளையராஜாவும் அவருடைய மூன்று சகோதரர்களும் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து திரைப்பட வாய்ப்புகளை தேடினார்கள் என்பதும் வறுமையில் இருந்தபோது கூட ஒற்றுமையாக இருந்த சகோதரர்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இசைஞானி இளையராஜா மற்றும் கங்கைஅமரன் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜாவை மீண்டும் சந்தித்துள்ளதாக கங்கை அமரன் புகைப்படத்துடன் கூடிய டுவிட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’இன்று நடந்த சந்திப்பு’ என்றும் ’இறை அருளுக்கு நன்றி’ என்றும் ’உறவுகள் தொடர்கதை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது..
இளையராஜா, கங்கை அமரனின் மகன்கள் வெங்கட்பிரபு, யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் ஒன்றாக இருந்தாலும், இளையராஜாவும் கங்கை அமரனும் கடந்த சில வருடங்களாக பேசி கொள்ளவில்லை. இளையராஜா குறித்து எஸ்பிபி விவகாரம் உள்பட ஒருசில விஷயங்களில் கங்கை அமரன் கோபமாக பேட்டியும் கொடுத்திருந்தார்.இந்த நிலையில் வேற்றுமைகளை மறந்து இருவரும் மீண்டும் சந்தித்து இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pavalar brothers reunion!! @ilaiyaraaja @gangaiamaren ???????????? pic.twitter.com/9MABjbLTZp
— venkat prabhu (@vp_offl) February 16, 2022
இன்று நடந்த சந்திப்பு .. இறைஅருளுக்கு நன்றி … உறவுகள் தொடர்கதை …!!! @ilaiyaraaja @vp_offl @Premgiamaren @thisisysr pic.twitter.com/7zy8kv6XVm
— gangaiamaren@me.com (@gangaiamaren) February 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments