தனுஷூக்கு பாட்டு பாட கற்று கொடுக்கும் இசைஞானி.. க்யூட் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷூக்கு பாட சொல்லிக் கொடுக்கும் இசைஞானி இளையராஜாவின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற ’உன்னோட நடந்தா’ என்ற பாடல் வரும் 8ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்த வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் இந்த பாடலை பாடும் தனுஷூக்கு இசைஞானி இளையராஜா பாட கற்றுக்கொடுக்கும் காட்சிகள் உள்ளன. க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோவை தனுஷ் மற்றும் இசைஞானி ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.
சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பல்ரது நடிப்பில் உருவான இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The first single #Onnodanadandhaa from #Viduthalai part 1 releasing on Feb8th
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2023
🎼 @ilaiyaraaja ⁰
🎤@dhanushkraja & #AnanyaBhat
✒️ #Suga
Promo from the recording session#Vetrimaaran @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/SjrJnXvC6K
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments