இளையராஜா- 75 நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுமா? சென்னை ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,January 28 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இளையராஜா 75' என்ற நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதோடு டிக்கெட் விற்பனையும் ஆன்லைனில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 'இளையராஜா- 75 என்ற பாராட்டு நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது? என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஐகோட் கேள்வி எழுப்பியதோடு, இளையராஜா 75 விழா தொடர்பான கணக்கு வழக்கு, செலவு விவரங்களை தயாரிப்பாளர் சங்கம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை கணக்கு வழக்கு, செலவு விவரங்களை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யும்போது நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்த ஐகோர்ட் கேள்விக்கு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட ஹீரோ அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

கட் அவுட்டுக்கு அண்டா பால்: சிம்பு புதுவிளக்கம்

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்பட்ம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சிம்பு சமீபத்தில் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்

'தல 59' படக்குழுவினர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் போனிகபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'பிங்க்' ரீமேக் திரைப்படம் உருவாகவிருப்பதாக அதிகாரபூர்வமான செய்தி சமீபத்தில் வெளியானது.

நடுக்கடலில் பேனர் கட்டிய சிம்பு ரசிகர்கள்: வேற லெவலில் VRV புரமோஷன்!

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

பாஜகவில் இணைந்தார் விஜய்-விஜயகாந்த் பட நாயகி

இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் சினிமா நட்சத்திரங்கள் பலர் களத்தில் குதிக்க காத்திருக்கின்றனர்.