இளையராஜாவின் 1001-வது படத்தின் இசை வெளியீடு விழா தேதி

  • IndiaGlitz, [Wednesday,March 16 2016]

இசைஞானி இளையராஜா 'தாரை தப்பட்டை' படத்துடன் 1000 படங்களுக்கு இசையமைத்து கின்னஸ் சாதனை செய்துள்ள நிலையில் அவருடைய இசைப்பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் அவருடைய 1001வது படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.


அர்ஜூன், மனீஷா கொய்ராலா நடிப்பில் உருவாகியுள்ள 'ஒரு மெல்லிய கோடு' என்ற திரைப்படம்தான் இளையராஜாவின் 1001வது படம் என்ற போஸ்டர் சற்று முன்னர் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. குப்பி, வனயுத்தம் ஆகிய உண்மைச்சம்பவங்கள் குறித்த படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் ஷாம் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷயா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கிருஷ்ணா ஸ்ரீராம் ஒளிப்பதிவும், கிருஷ்ண ரெட்டி படத்தொகுப்பும் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மனைவி குறித்த கதைதான் இந்த படம் என்று கூறப்படுகிறது.

More News

'தெறி'யில் விஜய்க்கு எத்தனை வேடம். இதுவரை வெளிவராத தகவல்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும்...

'விசாரணை' பாணியில் படமாகும் இன்னொரு நாவல்

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது...

மார்ச் 20-ல் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது...

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் குறித்த முக்கிய தகவல்

பிரபல இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் கோலிவுட் நாயகனுமாகிய ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர்...

இருமுகனில் ஒருமுகமாகும் கருணாகரன்

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உளவுப்பிரிவு அதிகாரி மற்றும் திருநங்கை