முதல் ஆளாக பத்ம விருதை பெற்ற இசைஞானி இளையராஜா!
Send us your feedback to audioarticles@vaarta.com
2018ஆம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா 2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றார். இன்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட முதல் விருது இசைஞானிக்கு என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய விழாவில் இசைஞானியையும் சேர்த்து மொத்தம் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மேலும் 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 72 பேருக்கு பத்மஶ்ரீ விருதும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் இளையராஜா மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, இசைக்கலைஞர் அரவிந்த் பாரிக், யோகா கலைஞர் நானம்மாள் ஆகியோர்கள் விருது பெற்ற தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments