முதல் ஆளாக பத்ம விருதை பெற்ற இசைஞானி இளையராஜா!

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

2018ஆம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில்  இசைஞானி இளையராஜா 2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றார். இன்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட முதல் விருது இசைஞானிக்கு என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய விழாவில் இசைஞானியையும் சேர்த்து மொத்தம் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மேலும் 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 72 பேருக்கு பத்மஶ்ரீ விருதும்  வழங்கப்பட்டன. இந்த விழாவில் இளையராஜா மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, இசைக்கலைஞர் அரவிந்த் பாரிக், யோகா கலைஞர் நானம்மாள் ஆகியோர்கள் விருது பெற்ற தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். 

More News

சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு: தினேஷ் கார்த்திக்

இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த தினேஷ் கார்த்திக்,

தளபதி விஜய்யை கலாய்த்த காமெடி நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் சங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இன்று படப்பிடிப்பு நடந்தது

கடைசி ஒரு பந்தில் 5 ரன், மனநிலை எப்படி இருந்தது: தினேஷ் கார்த்திக்

சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான டி20 போட்டியின் இறுதிபோட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி,

களத்தில் இருக்கும்போது தமிழில் பேசுவது ஏன்? தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் விளையாடினாலும், தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய்சந்தருடன் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

காத்ரீனாவின் அம்மா தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கின்றார் தெரியுமா?

நடிகை காத்ரீனா கைப் குறித்த படங்களின் செய்திகளை விட அவரது காதல் கிசுகிசுக்கள் செய்திகள் தான் அதிகம் வெளிவரும். தற்போதைய நிலவரப்படி அவர் சல்மான்கானின் காதலியாக இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டுகிறது.