'பொன்னியின் செல்வன்' படத்திற்காக ஸ்லிம் லுக்கில் மாறிய பிரபு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தில் இளையதிலகம் பிரபு அவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இதே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ரகுமான், பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது இளைய திலகம் பிரபு அவர்கள் உடல் இளைத்து ஸ்லிம்மாக காணப்படுவதைப் பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் இளைய திலகம் பிரபு அவர்கள் கடந்த 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தார் என்பது தெரிந்தது. அவர் முதல் படத்திலிருந்தே தனது குண்டான உடல் அமைப்புடன் நடித்து வந்தார் என்பதும் தற்போது அவர் ’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக திடீரென ஸ்லிம்மாக காணப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், நிழல்கள் ரவி, சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com