அதிரடி ஆக்சன் ஹீரோவுடன் 3வது முறையாக இணையும் இளையதிலகம் பிரபு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ நடிக்கும் படத்தில் இளையதிலகம் பிரபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிக்கும் 32-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் நாயகியாக சுனைனா நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஷால் நடித்த ’தாமிரபரணி’ மற்றும் ’ஆம்பள’ ஆகிய திரைப்படங்களில் பிரபு நடித்துள்ள நிலையில் தற்போது விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வினோத்குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Delighted to have #Ilayathilagam Actor Prabhu Sir joining our cast of #Vishal32.#SecondSchedule On Full Swing#V32 pic.twitter.com/q11PvgZ4od
— Vishal (@VishalKOfficial) September 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com