ஜல்லிக்கட்டு: தடையை மீறினால் தவறில்லை. இல.கணேசன்

  • IndiaGlitz, [Friday,January 13 2017]

சுப்ரீம் கோர்ட் தடையை மீறி தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் ஆகியவை நடந்து வருகிறது. அல்ங்காநல்லூர், பாலமேடு ஆகிய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு மட்டும் நடக்குமா? நடக்காதா? என்ற பரபரப்பில் உள்ளது.
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் எம்பியுமான இல.கணேசன் இதுகுறித்து கூறியபோது, 'ஜல்லிக்கட்டு இன்றி பொங்கல் முழுமை அடையாது. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுவது போல அரசே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முடியாது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பா.ஜ கட்சியின் கொள்கை என்ன என்பதை மாநில தலைமை முடிவு செய்யும்.
ஆனால் தடையை மீறி நடத்தினாலும் தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.'ஜல்லிக்கட்டு நடத்தினால் மாநில அரசை கலைக்க வேண்டும்' என சுப்பிரமணியசாமி தெரிவித்தது அவரது சொந்த கருத்து' என்று கூறியுள்ளார்.

More News

கோவையில் தடையை மீறி ரேக்ளா ரேஸ்.

தமிழகத்தில் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில் கோவையில் உள்ள எட்டிமடை என்ற பகுதியில் தடையை மீறி ரேக்ளா ரேஸ் தற்போது நடைபெற்று வருகிறது

'பைரவா' முதல் நாள் வசூல். சென்னையை மிஞ்சிய பகுதி பற்றிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தபோதிலும் முதல் நாள் வசூல் அபாரமாக இருந்துள்ளது

போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநலலூர். ஜல்லிக்கட்டு கிராமங்களில் பரபரப்பு

மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.

டி.எம்.செளந்திரராஜனுக்கு மத்திய அரசு செய்த கெளரவம்

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், நாகேஷ், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுக்கு தனது காந்தக்குரலால் ஏராளமான பாடல்களை பாடிய பிரபல பாடகர் டி.எம்.செளந்திரராஜன் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முடிஞ்சா குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வாங்க..சீமான்

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்