Vijay-Shruti Haasan Puli Song Lyrics is Here
Send us your feedback to audioarticles@vaarta.com
The duet Yendi, Yendi` composed by Devi Sri Prasad and sung by Illayathalapathy Vijay and Shruti Haasan for their upcoming mega budget Puli` is being released as an audio teaser today and here we give you the lyrics that are written by Kaviperarasu Vairamuthu.
விஜய்: வானவில் வட்டமாகுதே
வானமே கிட்ட வருதே
ஸ்ருதிஹாசன் : மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே
விஜய்: : இரவெல்லாம் வெயிலாகிப் போக
பகலெல்லாம் இருளாகிப் போக
காலங்கள் வேஷம் போடுதே
அடி ஏண்டி ஏண்டி என்ன மாத்துற?
ரெண்டு பூவக் கொண்டு என்னத் தாக்குற
அடி ஏண்டி ஏண்டி கண்ணச் சாய்க்கிற?
எம் புத்திக்குள்ள கத்தி வீசுற
*
விஜய்: : கட்டி கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி
ஸ்ருதிஹாசன் : கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி
விஜய்: : ஏ அழகின் மானே
வா மடிமேலே
ஸ்ருதிஹாசன் : புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது?
விஜய்: : ஏண்டி ஏண்டி என்ன மாத்துற
ஏண்டி ஏண்டி என்ன ஏய்க்கிற
ஏண்டி ஏண்டி பூவாப் பூக்குற
ஏண்டி ஏண்டி பூவால் தாக்குற
விஜய்: : பிஞ்சு மொழி சொல்லச் சொல்லப்
பேச்சுக்குள்ள தோடி ராகம்
ஸ்ருதிஹாசன் : முத்தமிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்
விஜய்: : தேன் வழியும் பொன்னே
வா கமலப் பெண்ணே
ஸ்ருதிஹாசன் : இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?
விஜய்: : ஏண்டி ஏண்டி என்ன மாத்துற
ஏண்டி ஏண்டி என்ன ஏய்க்கிற
ஏண்டி ஏண்டி பூவாப் பூக்குற
ஏண்டி ஏண்டி பூவால் தாக்குற
Follow us on Google News and stay updated with the latest!
-
Contact at support@indiaglitz.com
Comments