ஐஐடி பி.ஹெச்.டி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை

  • IndiaGlitz, [Wednesday,May 31 2017]

டெல்லி ஐஐடியில் பி.ஹெச்.டி படித்து வந்த 29 வயது மாணவி மணிலா தேவக் என்பவர் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் தங்கியிருந்த அறையில் கடிதம் எதுவும் இல்லாததால் அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை
டெல்லி ஐஐடியில் பி.ஹெச்.டி இறுதியாண்டு படித்து வந்த மணிலா தேவக்கின் படிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் டெல்லி போலிசார் மணிலாவின் அறையை சோதனை செய்தனர்
மாணவி மணிலா அதிக படிப்பினால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மணிலா தற்கொலை குறித்து போபாலில் உள்ள அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்க்கு பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்றும் டெல்லி போலிசார் தெரிவித்துள்ளனர்.