B.A, B.Sc, B.Com, B.Tech டிகிரி முடித்தவர்கள் நாய் பராமரிக்க விண்ணப்பிக்கலாம்… பதற வைக்கும் விளம்பரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
B.A, B.Sc, B.Com, B.Tech போன்ற டிகிரிக்கு இணையான படிப்பை படித்தவர்கள் நாய் பராமரிக்கும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என டெல்லி ஐ.ஐ.டி கல்வி நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்த விளம்பரத்தை புதுடெல்லி ஐ.ஐ.டி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில் நாய்களைப் பராமரிப்பதற்கு வேலைக்கு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது போல குறிப்பிடப்பட்டு இருந்தது.
இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதுடன் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளை நாய் பராமரிக்க அழைப்பு விடுப்பதாகவும் எதிர்ப்பு வலுத்தது. இதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் விளக்கம் அளித்ததுடன் அதைத் தற்போது திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து டெல்லி ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள புதுஅறிவிப்பில்,
“நாய் பராமரிப்பாளர் பணியானது, இளநிலை கால்நடை அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கானது. ஆனால் வெளியான அறிவிப்பில் வேறு ஒரு பணி அறிவிப்புக்கான இளநிலை பட்டப்படிப்பு தகுதிகள் தவறுதலாக நகல் எடுக்கப்பட்டு இணைக்கப் பட்டுவிட்டது. ஐ.ஐ.டி வளாகத்திற்கு கொண்டு வரப்படும் தெருநாய்களை பராமரித்தல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு நாய் பராமரிப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற தவறான அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு இதற்காக வேறு அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments