IIFA 2023 வழங்கிய விருதுகள்… முழு தொகுப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆண்டுதோறும் நடைபெறும் ஐஐஎஃப்ஏ இந்தியத் திரைப்பட அகாடமி விருதுகள் இந்த ஆண்டு அபுதாயில் உள்ள யாஸ் தீவில் 26 , 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 2022 இல் வெளியான இந்தியத் திரைப்படங்களில் இருந்து சிறந்த நடிகர், நடிகை, இசை, திரைக்கதை எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த வரிசையில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் ஹிருத்திக் ரோஷன், சிறந்த நடிகைக்கான விருது நடிகை ஆலியா பட் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உலகநாயகன் கமல்ஹாசன் என்று பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2023 இந்தியத் திரைப்பட அகாடமி விருது விழாவில் விக்ரம் வேதா (இந்தி ரீமேக்), பிரம்மாஸ்திரா முதல் பாகம், கங்குபாய் கதியாவடி திரைப்படங்கள் பல விருதுகளை அள்ளிச்சென்றன.
இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர் – நடிகர் கமல்ஹாசன்
சிறந்த படம் – த்ரிஷ்யம் 2
சிறந்த இயக்குநர் – ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்திற்காக நடிகர் ஆர்.மாதவன்
சிறந்த நடிகை – கங்குபாய் கதியவாடிக்காக நடிகை ஆலியா பாட்
சிறந்த நடிகர் – விக்ரம் வேதாவுக்காக ஹிருத்திக் ரோஷன்
சிறந்த துணை நடிகை – பிரம்மாஸ்திரத்திற்காக மௌனி ராய்
சிறந்த துணை நடிகர் – ஜக் ஜக் ஜீயோவுக்காக அனில் கபூர்
சினிமாவில் பேஷனுக்கான சிறந்த சாதனை – மணீஷ் மல்ஹோத்ரா
சிறந்த தழுவல் கதை – அமில் கீயன் கான் மற்றும் த்ரிஷ்யம் 2 படத்திற்காக அபிஷேக் பதக்
சிறந்த அசல் கதை – பர்வீஸ் ஷேக் மற்றும் ஜஸ்மீத் ரீன் டார்லிங்ஸ்
பிராந்திய சினிமாவில் சிறந்த சாதனை – ரித்தேஷ் தேஷ்முக் இயக்கிய மராத்தி திரைப்படம் வேத்
சிறந்த அறிமுக நடிகர் – கங்குபாய் கதியவாடிக்காக சாந்தனு மகேஷ்வரி மற்றும் காலாவிற்காக பாபில் கான்
சிறந்த அறிமுக நடிகை – தோகா அரௌண்ட் தி கார்னருக்காக குஷாலி குமார்
சிறந்த பின்னணிப் பாடகி – பிரம்மாஸ்திராவின் ரசியா பாடலுக்காக ஸ்ரேயா கோஷல்
சிறந்த பின்னணி பாடகர் – பிரம்மாஸ்திராவின் கேசரியா பாடலுக்காக அரிஜித் சிங்
சிறந்த இசையமைப்பாளர் – பிரம்மாஸ்திராவுக்காக ப்ரீதம்
சிறந்த பாடலாசிரியர் – அமிதாப் பட்டாச்சார்யா (பிரம்மாஸ்திராவின் கேசார்யா)
சிறந்த ஒளிப்பதிவு – கங்குபாய் கதியவாடி
சிறந்த திரைக்கதை – கங்குபாய் கதியவாடி
சிறந்த உரையாடல் – கங்குபாய் கதியவாடி
சிறந்த பாடல் நடன அமைப்பு – பூல் புலையா -2
சிறந்த ஒலி வடிவமைப்பு – பூல் புலையா
சிறந்த எடிட்டிங் – த்ரிஷயம் 2
சிறந்த பின்னணி இசை – விக்ரம் வேதா
சிறந்த ஒலி கலவை – மோனிகா ஓ மை டார்லிங்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments