பசிக்கிறதா எடுத்துச் சாப்பிடுங்க… போர்ட் வைத்து மனிதநேயத்தை காட்டிய அதிசய மனிதர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பீதிக்கு இடையில் ஒரு மனிதர் “பசிக்கிறதா எடுத்துச் சாப்பிடுங்க… தாகம் தீர்க்க தண்ணீர் இருக்கிறது’‘ என போர்டு வைத்து தள்ளுவண்டி மூலம் உணவுப் பொட்டலங்களை இலவசமாகக் கொடுத்து வருகிறார். இவரது மனிதநேயத்தைக் காட்டும் இந்தப் புகைப்படம் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இதே கொரோனாவால் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் அரசு அதிகாரிகளும் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து மாதக் கணக்கில் பணியாற்றி வருகின்றனர். இன்னொரு பக்கம் கொரோனா ஊரடங்கு காரணமாக சிலர் தங்களது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதிலும் தினக் கூலிகளின் நிலைமை படு மோசமாக இருந்து வருகிறது.
இப்படி கொரோனா எனும் பேரலை மக்களை தொடர்ந்து படு துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. அதோடு சாலை ஓரங்களிலும் ரயில் பாலத்தின் அடியிலும் கவனிக்க ஆள் இன்றி, உணவின்றி சில நூறு கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவிச் செய்ய தற்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தனிநபர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே இதுபோன்ற நிகழ்வுகள் மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்தி பலருக்கும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் “பசியாற எடுத்துச் சாப்பிடுங்க” என்று பெருந்தன்மையோடு ஒரு மனிதர் எழுதி வைத்து இருக்கிறார். அந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com