செல்போனில் டெம்பர் கிளாஸ் ஒட்டுவது ஆபத்தை ஏற்படுத்துமா? அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒட்டுமொத்த இந்தியாவிலும் செல்போனை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு செல்போனின் பயன்பாடும் பயன்படுத்தும் நேரமும் அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் செல்போனில் டெம்பர் கிளாஸ் ஒட்டுவதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதுபோன்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
காரணம் நாம் வாழும் தட்பவெட்ப நிலையானது எப்போதும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. வெயில், மழை, வசந்த காலம் என்று கலவையான தட்பவெட்ப சூழ்நிலைகளில் மனிதர்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம். இதனால் குளிர், வியர்வை என்று நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இதேபோன்றுதான் நாம் பயன்படுத்தும் செல்போனும் அவ்வோது அதிக சூடு அல்லது அதிக குளிர் தன்மையைச் சந்திக்கிறது. ஆனால் மனிதர்களாகிய நமக்கு வியர்ப்பது போல செல்போனிற்கு வியர்க்கவோ, குளிரவோ செய்யாது. இது நல்லதுதானே எனத் தோன்றலாம்.
உண்மையில் செல்போனிற்கு வியர்வை இல்லாத காரணத்தால் அது அதிக சூடு ஆகிறது. ஒருவேளை குளிர்ந்தால் அது ஒட்டுமொத்தமாக வேலை செய்வதையே நிறுத்துவி டுகிறது. இந்த மாற்றங்கள்தான் செல்போன் பழுதுக்கு முக்கிய காரணமாக மாறிவிடுகிறது.
பொதுவாக செல்போன் சூடாக இருக்கும்போது திடீரென்று ஸ்கீன் தள்ளாடுவதை பார்த்திருப்போம். இதனால் சற்றுநேரத்தில் அது வேலையே செய்யாமல் நின்றுவிடும்.
இதற்கு காரணம் செல்போன் அதிக சூடாக இருப்பதுதான். அதாவது செல்போனில் மென்பொருளை இயக்கிக்கொண்டு இருக்கும் சிப் சூடாகும்போது செல்போன் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு வேலை செய்யாமல் இருப்பதற்கு முயற்சிக்கிறது.
ஆனால் இப்படி செல்போன் வேலை செய்யாமல் திணறிக்கொண்டு இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம்? ஏன் இப்படி செய்கிறது என்று உடனடியாக அதை பழுதுபார்க்க முயற்சிக்கிறோம்.
உண்மையில் செல்போனில் உள்ள சிப் சூடாகும்போது அதிக வெப்பம் காரணமாக ப்ராசர்ஸர்களும் திணறுகின்றன. இதனால் செல்போனின் அனைத்து உள்பாகங்களும் சூடாகி வேகம் குறைகிறது. கூடவே செல்போனில் இருக்கும் சார்ஜ்-யும் குறைந்து போகிறது.
இதுகுறித்து இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தின் மின்னணு பொறியியல் பேராசிரியர் ராஸ் வ்யாட் மில்லிங்க்டன், சிப் சூடாகும்போது மேலும் சூடாகாமல் இருப்பதற்காகவே மொபைல் போன்கள் தங்களது வேகத்தை குறைத்துக் கொள்கின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
செல்போன்கள் பொதுவாக 35 டிகிரி செல்சியஸில் வேலை செய்வது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இயக்குவதற்கு தேவையான ஆற்றலை பேட்டரி மூலம் சேமித்து வைக்கும் ஆற்றலும் செல்போனிற்கு உண்டு.
ஒருவேளை நீங்கள் உங்கள் செல்போனிற்கு அதிக வேலைப்பளுவை கொடுக்கும்போது அது என்ன செய்கிறது என்றால் அதிக ஆற்றலை (பேட்டரியை) உறிஞ்சிவிடுகிறது. இதனால் அதன் வேகமும் குறைந்துபோகும்.
எனவேதான் செல்போன் அதிக சூடாகாமல் இருப்பது போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். சூடானால் அதிக ஆற்றலுடன் செயல்பட்டு வேகம் குறையும். கூடவே பேட்டரியும் குறைந்துபோகும். இதுபோன்ற நிலைமையை தவிர்க்க அதிக சூடாகாமல் பார்த்து கொள்வது அவசியம்.
எனவே செல்போன்களை சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டாம். அதேபோல சூரிய வெளிச்சத்திற்கு சென்ற உடனே ஸ்கீரின் தன்மையை கூட்டி வைப்பதாலும் செல்போன் அதி வேகமாக செயல்பட்டு சூடாகிவிடும். எனவே ஸ்கீரின் தன்மையை கூட்டி வைக்க வேண்டாம்.
மேலும் சூடாக இருக்கும்போது அதன் சூடு தன்மை குறையும் வரைக்கும் காத்திருக்க வேண்டியது அவசியம். சூடாக இருக்கும்போது சார்ஜ் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை இப்படி செய்தால் உங்களது செல்போன் நிரந்தரமான வேலை செய்யாமலேயே போய்விடலாம்.
அடிக்கடி சூடாகின்ற பழைய போன்களில் குறைந்த அளவு சூடு தன்மை ஏற்பட்டாலே அது அதிக பிரச்சனையைக் கொண்டுவரும்.
செல்போன்கள் தங்களது வெப்பத்தை தேக்கி வைப்பதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக அதன் டெம்பர் கிளாஸ்களும் காணப்படுகின்றன. செல்போனில் உண்டாகின்ற வெப்பத்தை உடனேயே வெளியேற்றுவதற்கு வழியில்லாம் இந்த டெம்பர் கிளாஸ்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதனால டெம்பர் கிளாஸ் செல்போனிற்கு நண்பனாக இல்லாமல் எதிரியாகவே செய்லபடுகிறது.
மேலும் செல்போன் பாதுகாப்பிற்கு அடிக்கடி அதன் கவரை கழட்டி நிழலில் வைப்பது அவசியம். முடிந்தால் மின்விசிறிக்கு அடியில் செல்போன்களை வைப்பதே நல்லது.
சூடான இடத்திலோ, வெயில் பகுதியிலோ உங்களது செல்போனை ஒருபோதும் வைக்க வேண்டாம்.
மேலும் செல்போனில் இருக்கும் பயன்படுத்தாத செயலிகளை நிறுத்தி வைப்பதே நல்லது. காரணம் அதிக செயலிகள் இயங்கிக் கொண்டிருந்தால் செல்போன் அதிக ஆற்றலை எடுத்துக் கொள்ளும். இதனால் வேகம் குறைந்து, செல்போன் சூடாவதற்கும் வாய்ப்பு இருக்கது.
இதனால் பவர் மோடிலேயே செல்போன்களை பயன்படுத்துங்கள். வெப்பத்தை தவிர்த்து குறைந்த பயன்பாட்டில் செல்போன் வேகத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
மேலும் செல்போன் சூடாகி விட்டது என்பதற்காக குளிர்சாதன பெட்டியில் வைக்காதீர்கள். அப்படி செய்தால் நீர் உள்ளே சென்று மொத்தமும் காணாமல் போய்விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com