தடை செய்யப்பட்ட ஆப்களை பயன்படுத்தினால் …. எச்சரிக்கை விடுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்!!!

  • IndiaGlitz, [Wednesday,July 22 2020]

 

இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஊறுவிளைவிக்கும் விதமாக சீன செயலிகள் செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டி மத்திய அரசு கடந்த ஜுன் 29 ஆம் தேதி 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்தது. அதையடுத்து இச்செயலிகளை இந்திய பயனாளர்கள் பதிவிறக்கம் செய்ய முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் செல்போன்களில் இச்செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டாலும் இணையத்தின் வாயிலாக இச்செயலிகளை உபயோகிக்க முடியும் என்பதால் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ஒருவேளை செல்போன்களில் இச்செயலிகள் கிடைக்கப் பெற்று அதைப்  பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினாலோ அல்லது மற்ற வழிமுறைகளில் இந்த ஆப்களை இயக்க முயற்சித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தண்டனை பிரிவு 69A வின் படி சீனாவின் டிக்டாக், யூசி பிராசசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. ஒருவேளை இந்தத் தடைச் சட்டத்தை மீறினால் அது இந்தியச் சட்டத்தை மீறும் குற்றத்திற்கு சமமானது என்ற எச்சரிக்கையையும் தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

More News

கர்ப்பமாகி ஒரே மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண்: ஆச்சரியத்தில் உறவினர்கள்

கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்ற அதிசய சம்பவம் அவரது உறவினர்களை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது

சமூக வலைத்தளத்தில் பரவும் வனிதாவின் புகைப்படம்: உடனிருக்கும் நபர் யார்?

வனிதா விஜயகுமாரின் சமீபத்திய திருமணம் பெரும் சர்ச்சையான நிலையில் இந்தத் திருமணம் குறித்து திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விவசாய நிறுவனங்கள் கடன்பெறும் வகையில் ரூ.5,990 கோடி நிதி ஒதுக்கீடு!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!

கொரோனா நேரத்தில் விவசாயத் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வகையிலான பல்வேறு திட்ட வடிவங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தது.

மொழி தெரியாமல் விழிபிதுங்க தேவையில்லை… இனி இந்த அறிவிப்பும் தமிழில் இருக்கும்!!!

விமானம் நிலையங்களில் பெரும்பாலும் அறிவிப்புகள் ஆங்கில மொழியிலே இருக்கும்.

இந்தியில் பட்டைய கிளப்பிய அஞ்சான்!

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் திருப்பதிசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'அஞ்சான்'. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் பெரிய வரவேற்பை பெற்றது