இதுதான் அமைதியான போராட்டமா? ரஜினி சொன்னதுதான் சரி! பிரபல நடிகர்
- IndiaGlitz, [Friday,December 20 2019]
மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளதை அடுத்து இந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இது குறித்துதனது கவலையை தெரிவித்து இருந்தார்.
ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது என்றும் அவர் கூறியிருந்தார். ரஜினிகாந்த் கூறிய இந்த கருத்தை ஒரு சில அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு போலீஸ்காரரை நூற்றுக்கணக்கானோர் சுற்றி கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் உள்ளது. இதுகுறித்து கூறிய ரோபோ சங்கர் ’இதுதான் அமைதியான போராட்டமா? இந்த மாதிரி போராட்டத்தை தான் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் எதிர்த்துள்ளார். சீப்பான அரசியல் செய்து ரத்தம் சிந்த வைக்க வேண்டாம்’ என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரோபோசங்கரின் இந்த டுவிட்டுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
If this is ur so called peaceful protest ????
— Robo Shankar (@ActorRoboSankar) December 20, 2019
Thaivar @rajinikanth will oppose it. ??✔️
You cannot do cheap politics with bloods on ur hand. #IStandWithRajnikanth#IStandWithRajinikanth
pic.twitter.com/en9dLlkpUh