'தல' அஜித் படத்தை தயாரிக்க தயார்: ஹேமாருக்மணி

  • IndiaGlitz, [Sunday,November 26 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தை பிரமாண்டமாக தயாரித்து, சரியான முறையில் புரமோஷன் செய்து நல்ல வெற்றியை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக பெரிய பட்ஜெட் படமான 'சங்கமித்ரா', எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'இறவைக்காலம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் ஆகியவற்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி, 'தல அஜித் ஒரு அற்புதமான மனிதர், நல்ல நடிகர் அவருடைய நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். எனவே அஜித் விரும்பினால் அவர் நடிக்கும் படத்தை தயாரிக்க தயாராக இருக்கின்றோம்' என்று கூறியுள்ளார்

அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 'விசுவாசம்' படத்தில் நடிக்கவுள்ளார். எனவே அஜித் 59' படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நான் அன்புச்செழியனின் சாதிக்காரன் இல்லை: சீனுராமசாமி

சசிகுமார் உறவினர் அசோக்குமார், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய மரணத்திற்கு காரணமான அன்புச்செழியனை போலீஸாரின் தனிப்படைகள் தேடி வருகின்றன

அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார்கள் வரும்: சசிகுமார்

பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டலால் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன்

கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன்

கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' டீசர் விமர்சனம்

'துருவங்கள் 16' படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இரண்டாவது படம் தான் 'நரகாரசுரன்'

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் நயன்தாராவுக்கு வேண்டாம்: லட்சுமி ராமகிருஷ்ணன்

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அறம்' திரைப்படம் நல்ல ஹிட்டாகி லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அவர் பொருத்தமானவர் என்பதை நிரூபித்ததாக கூறப்பட்டது.