ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் தான் துணை முதல்வர்: பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் முதல்வர் என்றால் நான் தான் துணை முதல்வர் என்று பிரபல நடிகர் ஒருவர் சினிமா விழா ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சிவகாமி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பவர்ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். அவர் விரைவில் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவர் என்னையும் கட்சியில் சேர்த்து கொள்ள வேண்டும். அவர் முதல்வர் என்றால் நான் தான் துணை முதல்வர். அப்படி இல்லை எனில் நான் கட்சி ஆரம்பிக்கின்றேன், அவர் எனது கட்சியில் சேரலாம்’ என்று காமெடியாக தெரிவித்தார்.

மேலும் பல சோதனைகள் மற்றும் கோடிக்கணக்கில் பண இழப்புகள் இந்த சினிமாத்துறை தனக்கு தந்தாலும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தால் கூட உலகம் முழுவதும் நாம் பிரபலம் அடையலாம் என்பதால் இந்த துறையில் தான் தொடர்ந்து இருப்பதாக பவர்ஸ்டார் கூறினார்.

More News

35 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்கும் 'முதல் மரியாதை' நடிகர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் 'முதல் மரியாதை'. கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தீபன்

படுக்கைக்கு அழைத்த விவகாரம்: வரலட்சுமி அதிர்ச்சி தகவல்

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு நடிகை வரலட்சுமி பரபரப்பான பதில் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

விஜய் பெற்ற ஸ்பெஷல் முத்தம்: வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: குவியும் பாராட்டு

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியது மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது

சகோதரர் படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த ஷாலினி அஜித்!

தல அஜித் மனைவி ஷாலினி அஜீத் தனது மகளுடன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் 'திரௌபதி' படத்தை பார்த்து ரசித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது