'பாகுபலி' போன்ற படம் இயக்குவதை மிஸ் செய்தது எப்படி? சுசீந்திரன்
- IndiaGlitz, [Wednesday,June 14 2017]
'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்த வைத்த இயக்குனர் சுசீந்திரன் 'அழகர் சாமியின் குதிரை', 'ஜீவா, 'பாண்டியநாடு', ஆதலினால் காதல் செய்வீர்', பாயும் புலி' போன்ற வெற்றி படங்களை இயக்கி இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். அவரது படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துக்களுடன் கமர்ஷியலும் கலந்து இருப்பதால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் தான் இயக்கிய 'ராஜபாட்டை' படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அந்த சமயத்தில் 'பாகுபலி' போன்ற பிரமாண்டமான படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் எதிர்பாராதவிதமாக 'ராஜபாட்டை' படம் தோல்வி அடைந்ததால் அந்த எண்ணம் கைவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கி வந்த 'அறம் செய்து பழகு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
விக்ராந்த், சந்தீப் கிஷான், மெஹ்ரின் பிர்ஜதா, ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ள 'அறம் செய்து பழகு' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவில் காசி விஸ்வாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.