சினிமா இல்லை என்றால் செத்து விடுவோம்: பிரபல தமிழ் இயக்குனர்
- IndiaGlitz, [Monday,October 19 2020]
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக சினிமா துறையே முடங்கி உள்ளது என்பதும் திரைப்பட படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்தாலும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதற்கு திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதும் அப்படியே திரையரங்குகள் திறந்தாலும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக புதிய திரைப்படங்கள் வெளிவருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் சினிமா இல்லையென்றால் செத்து விடுவோம் என்று இயக்குனர் மிஸ்கின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா இல்லையென்றால் செத்து விடுவோம் என்றும், சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் சினிமா இல்லாமல் இருக்க முடியாது என்று இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கமெண்ட்டுகளில் சினிமா என்பது பொது மக்களை பொருத்தவரை ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே என்றும், சினிமா இல்லை என்றால் சினிமாக்காரர்கள் வேண்டுமானால் செத்து விடலாம், ஆனால் பொதுமக்கள் யாரும் சாக மாட்டார்கள் என்றும் பதிவு செய்து வருகின்றனர். சினிமா குறித்து மிஸ்கினின் பதிவும் நெட்டிசன்கள் பதிலடியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.