வங்கக்கடலில் நிவர் புயல்: சென்னை அருகே கரை கடக்குமா?

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

தென்மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு சமீபத்தில் உருவானதை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் நவம்பர் 25ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கிமி வரை பலத்த காற்று வீசுவதோடு, கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த நிவர் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியபோது, ’தற்போது இருக்கும் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்தால் காரைக்கால்- கடலூர் இடையே ’நிவர்’ புயல் கரையை கடக்கும் என்றும், ஒருவேளை புயலின் வேகத்தில் தாமதமானால் புதுவை- சென்னை இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் அதாவது நவம்பர் 25ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இந்த புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது மிக விரைவில் தெரிய வரும்.

இந்த நிலையில் நிவார் புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் எதிர்கொள்ள மின்துறை தயார்: இருப்பதாகவும், 1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது என்றும், புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.