தேவையெனில் 144 தடை உத்தரவு போடலாம்...! மத்திய அரசு...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டுமெனில், 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சறுத்தல் காரணமாக இந்தியாவில் ஏற்கனவே பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
"இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதை தவிர்க்க, தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம். மருத்துவமனைகளில் இருக்கும் ஆக்சிஜன், ரெம்டெசிவர் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்கலாம். மாநிலங்களுக்குள்ளும், வெளியேயும், போக்குவரத்தில் தடை இருக்காது. ஆனால் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
மக்கள் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது, அநாவசிய காரணங்களுக்காக வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். வெளியாட்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பதும் நல்லதே. 100% தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com