கவினுக்கு பதில் லாஸ்ல்லியாவிடம் அறை வாங்க தயார்: பிரதீப் அந்தோணி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டினுள்ளே போட்டியாளர்கள் இருந்தபோது அவர்களுடைய உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சந்தித்து விட்டுச் சென்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கவின் சார்பில் அவரது நண்பர் பிரதீப் அந்தோணி வந்து கவினுக்கு ஓங்கி ஒரு அறை விட்டார். நீ மோசமாக விளையாடியதற்காக இந்த அறை என்றும், ஒருவேளை நீ பிக்பாஸ் டைட்டில் வென்றால் அதே மேடையில் அந்த அறையை தான் திரும்ப பெற்றுக்கொள்ள தயார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கவின் பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு இருந்தும் ரூபாய் 5 லட்சம் பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் தற்போது லாஸ்லியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் இந்த டைட்டிலை லாஸ்லியா பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதனை அடுத்து ஒருவேளை லாஸ்லியா இந்த டைட்டிலை வென்றால், தான் கவினுக்கு பதிலாக லாஸ்லியாவிடம் இருந்து அந்த அறையை பெற்றுக் கொள்ள தயார் என்று பிரதீப் அந்தோணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் பிரதீப்பின் இந்த டுவீட்டுக்கு பலவிதமான கமெண்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Social experiment:
— Pradeep Antony (@TheDhaadiBoy) October 1, 2019
Would you all make losliya win, if I'm willing to take a slap from her on behalf of kavi?#KudumbathukullayaeKasuIrundhaCommissionKekalamLa #SuyanalamKarudhi #ImAnAgentOfChaosToo #ILikePlayingStrategyGames
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments