கவினுக்கு பதில் லாஸ்ல்லியாவிடம் அறை வாங்க தயார்: பிரதீப் அந்தோணி

பிக்பாஸ் வீட்டினுள்ளே போட்டியாளர்கள் இருந்தபோது அவர்களுடைய உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சந்தித்து விட்டுச் சென்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கவின் சார்பில் அவரது நண்பர் பிரதீப் அந்தோணி வந்து கவினுக்கு ஓங்கி ஒரு அறை விட்டார். நீ மோசமாக விளையாடியதற்காக இந்த அறை என்றும், ஒருவேளை நீ பிக்பாஸ் டைட்டில் வென்றால் அதே மேடையில் அந்த அறையை தான் திரும்ப பெற்றுக்கொள்ள தயார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கவின் பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு இருந்தும் ரூபாய் 5 லட்சம் பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் தற்போது லாஸ்லியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் இந்த டைட்டிலை லாஸ்லியா பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதனை அடுத்து ஒருவேளை லாஸ்லியா இந்த டைட்டிலை வென்றால், தான் கவினுக்கு பதிலாக லாஸ்லியாவிடம் இருந்து அந்த அறையை பெற்றுக் கொள்ள தயார் என்று பிரதீப் அந்தோணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் பிரதீப்பின் இந்த டுவீட்டுக்கு பலவிதமான கமெண்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
 

More News

சிவாஜி, கமலுக்கு அடுத்து யோகிபாபு எடுக்கும் புதிய முயற்சி

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் காமெடி கேரக்டர்களிலும், ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் ஒரு கலாச்சார சீரழிவு: கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நூறாவது நாளை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வரும் ஞாயிறன்று இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும்

தர்ஷனை நேரில் அழைத்து பேசிய கமல்ஹாசன்: ஒரு ஆச்சரிய தகவல்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன், கடந்த ஞாயிறு அன்று திடீரென வெளியேற்றப்பட்டது

உங்களுக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைக்கும்: மோடிக்கு கமல் கூறும் ஐடியா!

பிரதமர் மோடியும் சீன அதிபரும் வரும் 11ஆம் தேதி மாமல்லபுரம் வரவிருக்கும் நிலையில் பிரதமருக்கும் சீன அதிபருக்கும் பேனர் வைக்க அனுமதி வேண்டும்

'தளபதி 64': ஆறு மணிக்கு இன்னொரு ஆச்சரிய அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'தளபதி 64' திரைப்படத்தின் மூன்று அறிவிப்புகள் வரிசையாக மூன்று நாட்கள் வெளிவந்தன என்பதை பார்த்தோம்