டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசு இதையும் திறக்கமாலாமே! நடிகை கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்கள் காத்திருந்தனர். மேலும் டாஸ்மாக் கடையை திறக்க வரும் அதிகாரிகளுக்கு கைதட்டி வரவேற்பு கொடுத்த காட்சியும் ஆங்காங்கே நடைபெற்றது
முதல் கட்டமாக டோக்கன்கள் கொடுக்கப்பட்டு அதன் பின்னர் மதுவகைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு தமிழக அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர் என பலர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி அவ்வப்போது டாஸ்மாக் திறப்பது குறித்த தனது கருத்துக்களை தனது பாணியில் நக்கலும் நையாண்டியுமாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்று முடிவெடுத்த தமிழக அரசு, கோயில்களையும் பள்ளிகளையும் திறக்கலாமே. டாஸ்மாக் கடைகளை திறக்க முடிந்த அரசுக்கு இவைகளைத் திறக்க முடியாதா என்ன? ஏனெனில் டாஸ்மாக் கடைகள் வருமானம் சம்பந்தப்பட்டது. ஆனால் பள்ளிகளும் கோயில்களும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. தற்போது ஒழுக்கத்தை விட வருமானமே முக்கியம்’என்று கஸ்தூரி கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
If Liquor shops can be opened , why not temples and schools ? Oh Yes. Its all about revenue, not about what a decent society deserves. #COVIDIOTS
— Kasturi Shankar (@KasthuriShankar) May 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments