டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசு இதையும் திறக்கமாலாமே! நடிகை கஸ்தூரி

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்கள் காத்திருந்தனர். மேலும் டாஸ்மாக் கடையை திறக்க வரும் அதிகாரிகளுக்கு கைதட்டி வரவேற்பு கொடுத்த காட்சியும் ஆங்காங்கே நடைபெற்றது

முதல் கட்டமாக டோக்கன்கள் கொடுக்கப்பட்டு அதன் பின்னர் மதுவகைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு தமிழக அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர் என பலர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி அவ்வப்போது டாஸ்மாக் திறப்பது குறித்த தனது கருத்துக்களை தனது பாணியில் நக்கலும் நையாண்டியுமாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்று முடிவெடுத்த தமிழக அரசு, கோயில்களையும் பள்ளிகளையும் திறக்கலாமே. டாஸ்மாக் கடைகளை திறக்க முடிந்த அரசுக்கு இவைகளைத் திறக்க முடியாதா என்ன? ஏனெனில் டாஸ்மாக் கடைகள் வருமானம் சம்பந்தப்பட்டது. ஆனால் பள்ளிகளும் கோயில்களும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. தற்போது ஒழுக்கத்தை விட வருமானமே முக்கியம்’என்று கஸ்தூரி கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

More News

முழுமையான வடிவில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிவிப்பு!!!

கொரோனா தடுப்பூசி பற்றி உலகின் அரை டஜன் நாடுகள் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் அரசின் புதிய அறிவிப்பு என்ன???

கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த காட்சியில் விஜய் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? மாஸ்டர் ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்

இன்று முதல் ஓப்பன் ஆகும் டாஸ்மாக்: எல்லை தாண்ட தயாராகும் சென்னை 'குடி'மகன்கள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு: முதல் டோக்கன்களை வாங்கிய ஸ்பெயின் குடிமகன்கள்

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை அடுத்து கடந்த 40 நாட்களாக குடிக்காமல் இருந்த குடிமகன்கள் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைமுன் ஆயிரக்கணக்கில் குவிய