கமல் தனித்து போட்டியிட்டால் தலை வணங்குவேன்: பழம்பெரும் இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு அணியாகவும் திமுக ஒரு அணியாகவும் போட்டியிட உள்ளது. இந்த நிலையில் தற்போதைய சூழலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என்றே அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த இரு கூட்டணியிலும் இணையாத புதிய கட்சிகளான டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்து போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் தனித்து போட்டியிட போவதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கமல் தனித்துப் போட்டியிட்டால் அவருக்கு தலைவணங்குவதாக பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான விசு கூறியுள்ளார். காஞ்சிபுரம் மதுராந்தகத்தில் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் பங்கேற்ற விசு மேலும் கூறியபோது, 'அரசியல் கூட்டணியில் எப்போது, என்ன நடக்கும் என தெரியாது என்றும், தான் அதிமுக, பாஜக கட்சியில் இருந்ததாகவும் இந்த கட்சிகளில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments