கமல் தனித்து போட்டியிட்டால் தலை வணங்குவேன்: பழம்பெரும் இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,February 23 2019]

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு அணியாகவும் திமுக ஒரு அணியாகவும் போட்டியிட உள்ளது. இந்த நிலையில் தற்போதைய சூழலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என்றே அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த இரு கூட்டணியிலும் இணையாத புதிய கட்சிகளான டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்து போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் தனித்து போட்டியிட போவதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமல் தனித்துப் போட்டியிட்டால் அவருக்கு தலைவணங்குவதாக பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான விசு கூறியுள்ளார். காஞ்சிபுரம் மதுராந்தகத்தில் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் பங்கேற்ற விசு மேலும் கூறியபோது, 'அரசியல் கூட்டணியில் எப்போது, என்ன நடக்கும் என தெரியாது என்றும், தான் அதிமுக, பாஜக கட்சியில் இருந்ததாகவும் இந்த கட்சிகளில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

More News

திமுக கூட்டணியில் தேமுதிக? 4 தொகுதிகள் தர சம்மதம் என தகவல்

அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையப்போகிறது

இனியும் பொறுக்க முடியாது: புதிய கட்சியை ஆரம்பிக்கும் தமிழ் இயக்குனர்

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குபின் திரையுலகில் உள்ள பலர் புதிய கட்சிகளை ஆரம்பித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் புதிய கட்சி ஒன்றை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜய், சூர்யா பட நடிகை!

விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரெண்ட்ஸ்' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

தேசம் தான் முக்கியம்; பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி குறித்து விராத் கோஹ்லி

கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதில் இருந்து

179 நாடுகள், 10 ஆயிரம் விண்ணப்பங்கள்: சாதனை செய்த இந்திய நடிகை

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதுண்டு.