ரஜினியும், கமலும் சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்: மநீம பொதுச்செயலாளர் 

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அரசியலுக்கு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணி மட்டுமின்றி புதிய கட்சிகளும் இந்த தேர்தலில் களம் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக உலக நாயகன் கமலஹாசன் ஆரம்பித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள கட்சி, டிடிவி தினகரன் கட்சி ஆகியவையும் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ இந்த தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று திரையுலகினர் உள்பட பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும், ரஜினி கமல் கூட இது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மக்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சிகே குமரவேல் அவர்கள் ரஜினியும் கமலும் சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறியுள்ளார். மேலும் ரஜினி, கமல் இணைவதே மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களின் விருப்பம் என்றும் மக்கள் நீதி மய்யம் ஆன்மீக அரசியலை ஏற்கும் என்றும் ஆனால் மத அரசியலை ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.