ஜெயலலிதா இருந்திருந்தால் ரெய்டுக்கு வந்திருப்பார்களா? சி.ஆர்.சரஸ்வதி
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதிலும் உள்ள சசிகலா குடும்பத்தினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இன்று காலை முதல் வருமான வரித்துறை அலுவலகர்களால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் சுமார் 1800 அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த சோதனை குறித்து மு.க.ஸ்டாலின், தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி சற்றுமுன் ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் 200 இடங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் இருந்தது. வரி ஏய்ப்பு செய்திருந்தால் ஒரு நிறுவனத்தை இத்தனை ஆண்டுகள் எப்படி நடத்தமுடியும்? ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல் ரெய்டுக்கு வந்திருப்பார்களா?
மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இருப்பதாலும், நமது எம்ஜிஆரையும், ஜெயா டிவியையும் மீட்பது என்று எடப்பாடி தரப்பினர் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதாலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
எங்கள் பக்கம் நியாயம் உள்ளது. உட்கார வைத்தவர்களின் தலையிலேயே கைவைக்கும் அரசு இது என்பது மக்களுக்கு தெரியும். இதை சட்டபடி எதிர்கொள்வோம்
இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments