நான் முதலமைச்சராக பதவி ஏற்றதும் செய்ய போகும் முதல் காரியம்: சூப்பர் மாடல் மீராமிதுன்

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஏற்கனவே ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சனம் செய்த மீராமிதுன், த்ரிஷா உள்பட ஒருசில நடிகைகளையும் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்துள்ள வீடியோவில், ‘நான் விரைவில் தமிழக முதலமைச்சராக வருவேன் என்றும் முதலமைச்சர் ஆனபின்னர் நான் செய்யப்போகும் முதல் காரியம் தமிழகத்தில் சைபர் கிரைம் போலீசார் பிரிவு வலுப்படுத்தப்படும் என்றும் நாலு போலியான சமூக வலைத்தள அக்கவுண்ட் வைத்துக் கொண்டு பெண்களை கீழ்த்தரமாக பேசுபவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு பெண் நல்ல நிலைக்கு வரும்போது பாராட்ட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்றும், ஆளை வைத்து தரக்குறைவான விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெண்கள் குறித்து தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விட மாட்டேன் என்று கூறிய மீராமிதுன் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் தன்னைப்பற்றி இனி மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தால் அதே வார்த்தையால் விஜய், சூர்யா குடும்பத்தின் பெண்களையும் விமர்சனம் செய்வேன் என்று கூறியுள்ளார்.

மீராமிதுனின் இந்த வீடியோவுக்கு விஜய், சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நெட்டிசன்களும் மீராமிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

கொட்டித்தீர்க்கும் கனமழை!!! தாய் தனது 3 குழந்தைகளோடு அடித்துச் செல்லப்பட்ட அவலம்!!!

மும்பை மாநகரில் நேற்று முன்தினம் இரவு முதல் கனத்த மழைபெய்து வருகிறது.

பாகிஸ்தான் அரசின் புதிய வில்லத்தனம்… கண்டனம் தெரிவிக்கும் மத்திய அரசு!!!

பாகிஸ்தான் அரசு தனது புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த வரைபடத்தை மத்திய அரசு முற்றிலும் நிராகரித்ததோடு கடும் கண்டனங்களையும் தெரிவித்து இருக்கிறது.

பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா: திரையுலகினர் அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையும் அதே நேரத்தில் கொரோனா வைரஸில் இருந்து குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது

மான, ரோஷம் உள்ளவரா நீங்கள்? தமிழ் நடிகரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயகுமார்

அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்த நிலையில் திடீரென புதிய கல்விக் கொள்கை காரணமாக இரு தரப்பு தலைவர்களும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் 

வாக்கிங் சென்ற இந்திய பெண் ஆராய்ச்சியாளர் படுகொலை: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் கடந்த 1ஆம் தேதி வாக்கிங் சென்றபோது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது