விஜய் பட வாய்ப்பு கிடைத்தால் என்ன கதை? கவுதம் மேனன் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,June 12 2018]

தளபதி விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பதே இன்றைய இளையதலைமுறை இயக்குனர்களின் வாழ்நாள் ஆசையாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கமல், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றிப்படங்களை இயக்கிய கவுதம் மேனனுக்கும் அந்த ஆசை இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா இயக்குனர் கவுதம் மேனனிடம் எப்போது விஜய் அவர்களை வைத்து ஒரு படம் இயக்குவீர்கள் என்று கேட்ட கேள்விக்கு கவுதம் மேனன் பதிலளித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கவுதம் மேனன் இதுகுறித்து கூறியபோது, 'விஜய் அவர்களை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. ஏற்கனவே ஒரு படம் கமிட் ஆகியிருந்த நிலையில் இந்த படம் வேண்டாம் வேறு ஒரு படத்தில் நாம் இணைவோம் என்று விஜய் கூறியிருந்தார். அதன்பின்னர் அவரை ஒருமுறை சந்தித்துள்ளேன். கண்டிப்பாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அது போலீஸ் ஸ்டோரியாக இருக்காது. லவ் மற்றும் ஆக்சன் கலந்த ஒரு படமாக இருக்கும்' என்று கூறினார்.

விஜய்யின் 63வது படத்தை இயக்க ஏற்கனவே ஒரு இயக்குனர்கள் கூட்டமே காத்திருக்கும் நிலையில் தற்போது கவுதம் மேனனும் அந்த காத்திருக்கும் பட்டியலில் இணைந்துள்ளார்.

More News

டிரம்ப்-கிம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு: முடிவுக்கு வரும் பகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு சந்தித்து பேசினர். வரலாற்று சிறப்பு மிக்க

நானும் ஒரு காலா' தான்: ஜிக்னேஷ் மேவானி பெருமிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் கடந்த 7ஆம் தேதி பலவிதமான தடைகளை உடைத்து வெளியான திரைப்படம் 'காலா'

விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால்.. கமல்ஹாசன் பேச்சு

உலக நாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி

சமந்தாவின் வெளிவராத ஜாலியான திருமண வீடியோ

கோலிவுட் திரையுலகில் திருமணத்திற்கு பின்னரும் நாயகியாக நடித்து வெற்றி படம் கொடுக்க முடியும் என்று நிரூபித்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு

விஜய்யை சந்தித்த விக்னேஷ் சிவன்! 'தளபதி 63' படத்தை இயக்குகிறாரா?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தீபாவளி வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.