நான் விஜய் படத்தை இயக்கினால் தீபிகா படுகோன் தான் ஜோடி.. பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Sunday,September 24 2023]

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் உடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் ஆவலுடன் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் நான் விஜய்யை வைத்து படம் இயக்கினால் தீபிகா படுகோன் தான் ஜோடி என்று தெரிவித்துள்ளார். அந்த பிரபல நடிகர் விஷால்.

விஜய் நடிக்க இருக்கும் திரைப்படத்தை விஷால் இயக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் விஜய்யும் விஷால் உடன் இணைந்து தகுந்த நேரத்தில் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் குறித்து விஷால் கூறியபோது, ‘விஜய் அளவுக்கு சினிமாவில் மோசமான விமர்சனங்களை எதிர் கொண்டவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவர் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு வெற்றியை பதிலாக அளித்தார். அவரைப் பற்றி தவறாக எழுதிய பத்திரிகைகள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியது. அதுதான் விஜய்யின் வெற்றி

விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை உள்ளது, ஒருவேளை அது நடந்தால், அந்த படத்தில் தீபிகா படுகோன் தான் விஜய்க்கு ஜோடியாக இருப்பார் என்று கூறியுள்ளார். விஜய் நடிக்கும் படத்தை விஷால் இயக்குவாரா? அந்த படத்தில் தீபிகா படுகோனே ஜோடியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'எஸ்டிஆர் 48' படத்தின் ரகசிய படப்பிடிப்பு நடந்ததா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்..!

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை  தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான

துருவ் விக்ரம் அடுத்த படம்.. புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'லியோ' விஜய்யின் இண்ட்ரோ காட்சியை காண்பித்துவிட்டு, தண்டனையும் கொடுத்த லோகேஷ்.. மாஸ்டர் நடிகர் புலம்பல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் டிவி சீரியல் நடிகை? சீரியலை பாதியில் விட்டுவிட்டு வருகிறாரா?

 விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க

வேட்டையன் - சந்திரமுகி மோதும் மாஸ் காட்சி.. 'சந்திரமுகி 2' புதிய ட்ரைலர்..!

 ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவான  'சந்திரமுகி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி