சொந்த அணியைவிட ஐபிஎல் முக்கியம்? இளம் வீரரின் முடிவால் அதிர்ந்து போன இங்கிலாந்து!
- IndiaGlitz, [Wednesday,March 10 2021] Sports News
இங்கிலாந்து அணியில் இளம் ஆல் ரவுண்டராக இருந்து வரும் சாம் கரன் தனது சொந்த நாட்டுப் போட்டியை விட சென்னை சிஎஸ்கே எனக்கு முக்கியம் எனக் கூறி இருக்கிறார். இந்தத் தகவலால் இங்கிலாந்து அணி தற்போது விழிப்பிதுங்கி இருக்கிறது. முன்னதாக ஐபிஎல் போட்டிகளை காரணம் காட்டி அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடர் போட்டியில் சாம் கரன் களம் இறங்க வில்லை. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒட்டுமொத்த போட்டியிலும் களம் இறங்குவது சந்தேகம்தான் எனத் தெரிவித்து உள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே சார்பாக விளையாடி வரும் சாம் கரன் ஒரு ஆல்ரவுண்டர் பிளேயராக கவனம் பெற்று வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே தகுதிச் சுற்றுக்கே தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு எப்படியாவது வெற்றி வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்று கேப்டன் தோனி அணியை கட்டமைத்து வருகிறார்.
இந்நிலையில் 22 வயதே ஆன இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும். எனது அணி தகுதிச் சுற்றில் தேர்ச்சி பெற்றுவிட்டால் அணிக்காக கடைசி வரை விளையாடியே ஆக வேண்டும். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணியில் என்னால் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் சிஎஸ்கே அணிக்கு உற்சாகமாக இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு உவப்பு அளிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.