சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் தியேட்டர் உரிமையாளரின் குரல்! பிரச்சனைகள் தீருமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தியேட்டர் உரிமையாளரின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் தற்போது மூடப்பட்டு இருக்கும் நிலையில் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ராயபுரம் தொகுதியில் ஐட்ரீம் தியேட்டரின் உரிமையாளர் மூர்த்தி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இவர் ராயபுரத்தில் செல்வாக்குள்ள அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவருடைய குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க இருப்பதை அடுத்து தியேட்டர் உரிமையாளர்களின் பிரச்சனைகள் சட்டமன்றத்திலும் ஒலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ஐட்ரீம் மூர்த்தி திரையரங்கு உரிமையாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் மகன் பன்னீர்செல்வம் தோல்வியடைந்துள்ளார். திமுகவின் சேகர்பாபுவை எதிர்த்துப் போட்டியிட்ட இவர் சில சுற்றுகளில் முன்னணியில் இருந்தாலும் இறுதியில் தோல்வி அடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments