சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் தியேட்டர் உரிமையாளரின் குரல்! பிரச்சனைகள் தீருமா?

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தியேட்டர் உரிமையாளரின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் தற்போது மூடப்பட்டு இருக்கும் நிலையில் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ராயபுரம் தொகுதியில் ஐட்ரீம் தியேட்டரின் உரிமையாளர் மூர்த்தி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இவர் ராயபுரத்தில் செல்வாக்குள்ள அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவருடைய குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க இருப்பதை அடுத்து தியேட்டர் உரிமையாளர்களின் பிரச்சனைகள் சட்டமன்றத்திலும் ஒலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ஐட்ரீம் மூர்த்தி திரையரங்கு உரிமையாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் மகன் பன்னீர்செல்வம் தோல்வியடைந்துள்ளார். திமுகவின் சேகர்பாபுவை எதிர்த்துப் போட்டியிட்ட இவர் சில சுற்றுகளில் முன்னணியில் இருந்தாலும் இறுதியில் தோல்வி அடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,

More News

தேன் போல இனித்திடும் வாக்குறுதி: ஸ்டாலினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்

12 மணி வரை மட்டுமே காய்கறி கடை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி

மனைவியை விவாகரத்து செய்கிறார் பில்கேட்ஸ்: 27 ஆண்டுகால திருமண உறவு முடிவு!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

தினக்கூலி வீட்டில் இருந்து ஒரு பெண் எம்எல்ஏ… வாழ்த்திக் மகிழும் நெட்டிசன்கள்!

மேற்கு வங்காளத்தில் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பின் நீங்கள் தான்: நடிகர் சித்தார்த் டுவிட்டுக்கு ஸ்டாலின் பதில்

ஜெயலலிதாவுக்கு பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார் என நடிகர் சித்தார்த் பதிவு செய்த ட்விட்டிற்கு முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.