வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் டாக்டர் ராஜசேகர்?

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை அவ்வளவு சீக்கிரமாக தமிழ் ரசிகர்கள் மறந்துவிட முடியாது. இவர் நடித்த 'இதுதாண்டா போலீஸ்' தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட்டாகியது. தெலுங்கில் பல வெற்றி படங்களை இவர் கொடுத்திருந்தாலும் இவரது சொந்த ஊர் தமிழகத்தை சேர்ந்த தேனி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் டாக்டர் ராஜசேகர் நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ஆம், 'சென்னை 600028', 'மங்காத்தா' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தில் டாக்டர் ராஜசேகர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். இரண்டு ஹீரோ கதையம்சம் கொண்ட இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இதுதாண்டா போலீஸ், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன்' போன்ற தமிழ் படங்களுக்கு பின்னர் மீண்டும் டாக்டர் ராஜசேகரின் ஆக்ரோஷமான நடிப்பை தமிழ் ரசிகர்கள் பார்க்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்ன நடந்தது குடும்பத்தில்? மனம் திறக்கும் பாலாஜி

நகைச்சுவை நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா நேற்று சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தன்னை ஜாதி பெயர் கூறி கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ரஜினிக்காக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த இந்து அமைப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் குறித்து அவர் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் பெரும்புயலை கிளப்பிவிட்டது...

ஆர்மீனியா நாட்டிற்கு செல்லும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் செல்வராகவனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

ரஜினியை விமர்சித்தாரா சத்யராஜ்? சிபிராஜ் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து கடந்த வாரம் பேசியதில் இருந்து பல்வேறு தரப்பினர் அவரை விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்போம் என்று இதுவரை எந்த அரசியல் தலைவரும் கூறவில்லை. மாறாக அவர் அரசியலுக்கே வரக்கூடாது என்று விமர்சனம் செய்து வருகின்ற&

நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான கலைஞரின் புகைப்படம். திமுக தொண்டர்கள் உற்சாகம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன்முதலாக எம்.எல்.ஏஆக தேர்வு பெற்றார்...