உலக அளவில் 15வது இடத்தையும் இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்த விஜய்

  • IndiaGlitz, [Wednesday,February 03 2016]

சர்வதேச அளவில் தகவல் பெட்டகமாக விளங்கி வரும் விக்கிபீடியா இணையதளம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த இணையதளத்தில் அதிகளவில் மாற்றம் செய்யப்பட்ட பிரபலங்கள் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது.


சர்ச்சைக்குரிய பிரபலங்கள் என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக அளவில் 127 பிரபலங்களின் பக்கங்கள் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 6 பேர் இந்தியர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இளையதளபதி விஜய்யின் விக்கிபீடியா பக்கம் 17,736 முறை மாற்றம் செய்யப்பட்டு உலக அளவில் 15வது இடத்திலும் இந்திய அளவில் முதல் இடத்திலும் இடம்பெற்றுள்ளது. விஜய்க்கு அடுத்தபடியாக 47வது படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும், 93வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ரஜினிக்கு அடுத்தபடியாக வசூல் கிங்காக திகழ்பவர் விஜய்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை. ஆனால் அதே நேரத்தில் அதிகளவு சர்ச்சைக்குரிய பிரபலமாகவும் விஜய் உள்ளார் என்பதே விக்கிபிடீயாவின் இந்த கருத்துக்கணிப்பில் இருந்து தெரியவருகிறது.

More News

நடிகர் பிரகாஷ்ராஜூக்கு கிடைத்த பதவி உயர்வு

பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்த மாணவர்...

விஜய்-அஜித் நாயகிக்கு இன்று பெங்களூரில் திருமணம்

அஜித் நடித்த 'அமராவதி' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை சங்கவி, இளையதளபதி விஜய் நடித்த...

'இறுதிச்சுற்று' இயக்குனருக்கு கார்த்தி பாராட்டு

கடந்த வெள்ளியன்று வெளியான 'மாதவனின் 'இறுதிச்சுற்று' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில்...

'கத்தி' - 'ஐ' படங்களுடன் கனெக்ஷன் ஆன 'தெறி'

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டப்பிங் பணியை விஜய் முடித்துவிட்டார் என்பதை நேற்று பார்த்தோம்...

'தர்மதுரை' படப்பிடிப்பில் விஜய்சேதுபதி காயம்

விஜய்சேதுபதி நடித்த 'காதலும் கடந்து போகும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து இம்மாதம் வெளியாகவுள்ள...