close
Choose your channels

உலக அளவில் 15வது இடத்தையும் இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்த விஜய்

Wednesday, February 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சர்வதேச அளவில் தகவல் பெட்டகமாக விளங்கி வரும் விக்கிபீடியா இணையதளம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த இணையதளத்தில் அதிகளவில் மாற்றம் செய்யப்பட்ட பிரபலங்கள் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது.


சர்ச்சைக்குரிய பிரபலங்கள் என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக அளவில் 127 பிரபலங்களின் பக்கங்கள் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 6 பேர் இந்தியர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இளையதளபதி விஜய்யின் விக்கிபீடியா பக்கம் 17,736 முறை மாற்றம் செய்யப்பட்டு உலக அளவில் 15வது இடத்திலும் இந்திய அளவில் முதல் இடத்திலும் இடம்பெற்றுள்ளது. விஜய்க்கு அடுத்தபடியாக 47வது படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும், 93வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ரஜினிக்கு அடுத்தபடியாக வசூல் கிங்காக திகழ்பவர் விஜய்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை. ஆனால் அதே நேரத்தில் அதிகளவு சர்ச்சைக்குரிய பிரபலமாகவும் விஜய் உள்ளார் என்பதே விக்கிபிடீயாவின் இந்த கருத்துக்கணிப்பில் இருந்து தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment