அவரது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன்… கோலியின் மனம் கவர்ந்த இவர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறிய கருத்துகள் இணையத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளுக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். தற்போது பேட்டிங்கில் கவனம் செலுத்திவரும் அவர் ஆர்சிபி அணிக்கான போட்டோஷுட் நிகழ்ச்சியின்போது தனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
அதில் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர் எனப் பதிலளித்த கோலி, தொடர்ந்து அவராக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒருநாள் காலையில் எழுந்தவுடன் மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன், அதில் ரொனால்டோவிற்கு எங்கிருந்து இவ்வளவு மனவலிமை வருகிறது எனப் பார்த்துவிடுவேன் என்று பதிலளித்து இருக்கிறார். இந்தப் பதிலைக் கேட்ட அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்துவரும் ரொனால்டோவிற்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மேலும் அவருடைய மனவலிமை, டயட், வொர்க் அவுட், விளையாட்டு திறன் என்று அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்து வருகின்றனர். இந்நிலையில் ரெனால்டோவின் மூளையை ஸ்கேன் செய்துபார்க்க வேண்டும் என்று இந்திய வீரர் கோலி சொல்லியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல தங்களை கவர்ந்த விளையாட்டு வீரர் யார் என்ற கேள்விக்கு ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் அந்த அணியின் கேப்டன் டுபிளசிஸ் ஆகிய இருவரும் ரோஜர் பெடரர் எனும் பதிலைக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
We asked @imVkohli, @mdsirajofficial and @faf1307 about their favourite athlete, what they would do on a deserted island and much more during their official team photoshoot. Find out their answers on @kreditbee presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2022 #ನಮ್ಮRCB pic.twitter.com/zxnXzjF8X0
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments