மக்கள் அடைந்த கஷ்டத்தால் கண்ணீர் வந்தது....! சுந்தர் பிச்சை உருக்கமான பேச்சு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காலத்தில், இந்தியாவில் நடந்தேறிய மக்களின் இறப்பு செய்தி, எனக்கு கண்ணீர் வரவழைத்தது என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்கள், உலகளவில் மிகவும் பிரபலமான கூகுள் நிறுவனத்தில், சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கும் இவர்தான் சிஇஓ-வாக இருக்கிறார். இது உலகளவில் மிகப்பெரிய பதவியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2004-இல் கூகுளில் பணிக்கு சேர்ந்த இவர், அந்நிறுவனத்தின் டூல்கிட் மற்றும் குரோம் ஆகியவற்றை உருவாக்கியது இவர்தான். இவரின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நுண்ணறிவு காரணமாகத்தான், கூகுளின்
சிஇஓவாக பதவி உயர்வு பெற்றார்.
அண்மையில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்த சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது, பத்திரிக்கையாளர் அவரிடம் கடைசியாக எப்போது கண்ணீர் விட்டீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு " உலகளவில் கொரோனா பரவி, லாரிகளில் பிணச்சடலங்களை கண்டபோது கண்ணீர் மல்க அழுதேன். இந்திய மக்கள் கொரோனாவால் படும் துயரங்களை பார்க்கும் போது, எனக்கு கண்ணீர் வந்தது. நான் அமெரிக்க குடிமகன் என்றாலும், இந்திய உணர்வு எனக்குள் வாழ்ந்து வருகிறது. இந்தியா எனக்குள்ளும் பிணைந்துள்ளது" என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments