கொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Friday,April 10 2020]

 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானியான ராமன் கங்காகேத்கர் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று இன்னும் மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டாலும் விவரம் தெரியாமல் தற்போது சில பொதுமக்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்து இருக்கிறது. இந்நிலைமை நீடிக்குமானால் என்னவாகும் என்று மக்களிடையே பீதி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது ICMR இன் மூத்த விஞ்ஞானி கொரோனா நோய்த்தொற்று மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை எனக் குறிப்பிட்டு இருப்பது சற்று நிம்மதியை தருவதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், ICMR கொரோனா பரவலைத் தடுக்க கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில புது வழிமுறைகளையும் அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்ட நபருடன் தொடர்புடையவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். அதாவது நொய்த்தொற்று ஒருவருக்கு உறுதிச்செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 5 முதல் 14 நாட்களுக்குள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் கொரோனா அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்தவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கடைசி 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பின் முறையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அடுத்து, தீவிர சுவாசக் கோளாறுகள் உடைய நோயாளிகள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். தூய்மைப்பணியாளர்கள், துப்புரவு வேலைகளில் ஈடுபடுவோர் மிக எளிதாக கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது. எனவே அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள், அவர்களுடன் தொடர்புடைய நபர்கள், வெளி மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள், கூட்டமான இடங்களில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு அறிகுறிகள் இருப்பின் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் தொடர்ச்சியாக 7 நாட்களில் கொரோனா அறிகுறிகளால் அவதிப்படுபவர்களுக்கு Real – time Polymerase chain reaction முறையில் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று IMCR கேட்டுக்கொண்டிருக்கிறது. மேற்கண்ட முறைகளை பரிசோதனைகள் விரைவாக செய்யப்படுமானால் இந்தியா அடுத்தக் கட்டத்திற்கு செல்லாது எனவும் மூத்த விஞ்ஞானி ராமன் கங்காகேத்கர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

More News

தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 30க்கும் மேற்பட்ட டெல்லி எம்ய்ஸ்  மருத்துவர்கள், பணியாளர்கள்!!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 72 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்

சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த தம்பதியினருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து

கொரோனா தடுப்பு நிதியாக அட்லி கொடுத்த தொகை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா தொழிலாளர்கள்

டைட்டிலை ரிலீஸ் செய்ய ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள்

ஊரடங்கு உத்தரவால் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 1400 கிலோ மீட்டருக்கு