மதுரையில் பனிமலை,ரோபோ, நீச்சல்குளம்...கிரியேட்டிவிட்டியில் உச்சத்தில் சுயேட்சை வேட்பாளர்...!
- IndiaGlitz, [Thursday,March 25 2021]
மதுரை,தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நிற்கும் துலாம் சரவணன்,வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
மோடி ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும், 15 லட்சம் செலுத்துவேன் என தேர்தல் வாக்குறுதியை கூறியிருந்தார். இதுநாள் வரை அதை வைத்து சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். மோடியையே மிஞ்சும் அளவிற்கு, மதுரை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் துலாம் சரவணன் தேர்தல் அறிக்கைகளை கிரியேட்டிவியை அள்ளி விடும் விதமாக இஷ்டத்திற்கு கூறியுள்ளார். இவர் குப்பைத்தொட்டி சின்னத்தில் அங்கு போட்டியிடுகிறார்.
அவர் அளித்துள்ள தேர்தல் அறிக்கைகள் பின்வருமாறு,
• தொகுதியில் வசித்து வரும் மக்களுக்கு மூன்று மாடி கட்டிடம், நீச்சல் குள வசதியுடன்.
• இல்லத்தரசிகளுக்கு உதவிட ரோபோ.
• திருமணமாகும் பெண்களுக்கு 100 சவரன் தங்கநகை
• தெற்குத்தொகுதி சில்லென இருக்க 300 அடி உயரத்தில் செயற்கை பனிமலை
• ஒவ்வொரு வீட்டிற்கும், வருடத்திற்கு ரூ.1கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
• சுயதொழில் துவங்கும் இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய்
• மக்கள் அனைவருக்கும் இலவசமாக ஐ-போன் வழங்கப்படும்
• அனைத்து வீட்டிற்கும் 20 லட்சம் மதிப்பு கார் வழங்கப்படும்
• வீடு ஒன்றிற்கு சிறிய ஹெலிகாப்டர் வழங்கப்படும்
• மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 10 லட்சம் வழங்கப்படும்
• கால்வாய்கள் வெட்டி வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும்
• 100 நாட்கள் பயணமாக நிலவுக்கு அழைத்து செல்லப்படும்
• தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
• தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.