திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் தீவைப்பு. காரணம் யார்?

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

சென்னையில் மாணவர்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீஸார் நிறுத்தி வரும் நிலையில் ஒருசில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

சற்று முன்னர் திருவல்லிக்கேணி பகுதியில் போலீசார் தடியடி நடத்தி மெரீனாவுக்கு செல்பவர்களை தடுத்தி நிறுத்தியவதாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம்.

இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு போராட்டக்கார்ர்கள் தீ வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காவல்நிலையத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீவைக்கப்பட்டதாகவும், இவற்றில் சில வாகனங்கள் போலீசார் வாகனங்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இருப்பினும் இதுபோன்ற வன்முறைகள் நிச்சயம் மாணவர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் மாணவர்கள், போராட்டக்காரர்கள் போர்வையில் ஊடுருவிய சில புல்லுருவிகளே இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்ககூடும் என்றும் கூறப்படுகிறது.