இந்தியாவிடம் எனது வித்தை செல்லுபடியாகும். வங்கதேச பந்துவீச்சாளர்
- IndiaGlitz, [Tuesday,June 13 2017]
ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி தற்போது கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இதில் ஒரு ஒற்றுமை என்னவெனில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் பிரிவதற்கு முன்னர் ஒருங்கிணைந்து இருந்தபோது அந்த நாட்டை இங்கிலாந்து ஆட்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா vs வங்கதேச போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட, நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணியை வங்கதேசம் வீழ்த்த முடியுமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. அதே நேரத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை தோற்கடித்த வங்கதேச அணிக்கு இந்தியாவை தோற்கடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்கதேச அணியின் வேகப் பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தன்னால் இந்தியாவை நிலைகுலைய செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்-ஆப் பந்துகளை வீசுவதில் வல்லவரான ரஹ்மான், தனது பந்துவீச்சு இதுவரை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் கைகொடுக்கவில்லை என்றாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிச்சயம் எனது வித்தை செல்லுபடியாகும் என்று கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்த அனுபவம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஹ்மானின் நம்பிக்கை பலிக்குமா? அல்லது இந்தியாவின் வெற்றி தொடருமா? என்பதை ஞாயிறு அன்று நடைபெறும் அரையிறுதி போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்